Homeசெய்திகள்சினிமா'எம்புரான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய ரஜினி.... பிரித்விராஜின் நெகிழ்ச்சி பதிவு!

‘எம்புரான்’ பட டிரைலரை பார்த்து பாராட்டிய ரஜினி…. பிரித்விராஜின் நெகிழ்ச்சி பதிவு!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எம்புரான் படத்தின் டிரைலரை பார்த்து பாராட்டியுள்ளார்.'எம்புரான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய ரஜினி.... பிரித்விராஜின் நெகிழ்ச்சி பதிவு!

பிரித்விராஜ், மோகன்லால் கூட்டணியில் கடந்த 2019 ஆம் ஆண்டு லூசிபர் திரைப்படம் வெளியானது. அரசியல்- திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமான தன்னுடைய முதல் படத்திலேயே பெயரையும் புகழையும் பெற்றார். இதைத் தொடர்ந்து பிரித்விராஜ் இயக்கத்தில் லூசிபர் 2 – எம்புரான் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் ஏற்கனவே படத்தின் டீசரும் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரித்விராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எம்புரான் பட ட்ரெய்லரை முதலில் பார்த்து ரஜினி எனவும், அதை பார்த்த பிறகு ரஜினி சொன்ன வார்த்தைகளை தான் என்றும் நினைவில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ரஜினியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார் பிரித்விராஜ். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.'எம்புரான்' பட டிரைலரை பார்த்து பாராட்டிய ரஜினி.... பிரித்விராஜின் நெகிழ்ச்சி பதிவு!

இதற்கிடையில் எம்புரான் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் அறிவித்த தேதியில் எம்புரான் திரைப்படம் ரிலீஸாகும் என படக்குழு சமீபத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ