spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉலக செஸ் சாம்பியன் குகேஷை வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த்!

உலக செஸ் சாம்பியன் குகேஷை வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக செஸ் சாம்பியன் குகேஷை வீட்டிற்கு அழைத்து வாழ்த்தியுள்ளார்.உலக செஸ் சாம்பியன் குகேஷை வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த்!

சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 18 வயதிலேயே குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்காக இவருக்கு பரிசு கோப்பையும், ரூ. 11 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் குகைஷை பாராட்டி வருகின்றனர். அதேசமயம் சாம்பியன் பட்டம் வென்று சென்னை திரும்பிய குகேஷுக்கு தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. அத்துடன் முதல்வர் ஸ்டாலின் ரூ. 5 கோடிக்கான காசோலையையும் குகேஷுக்கு வழங்கினார்.உலக செஸ் சாம்பியன் குகேஷை வீட்டிற்கு அழைத்து வாழ்த்திய ரஜினிகாந்த்! இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், குகைஷை நேரில் அழைத்து வாழ்த்தி அவருக்கு கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கினார். இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், குகைஷை தனது வீட்டிற்கு அழைத்து அவரை வாழ்த்தியுள்ளார். அத்துடன் ரஜினிகாந்த், குகேஷுக்கு சால்வை போர்த்தி புத்தகம் ஒன்றையும் பரிசாக கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்களை குகேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

MUST READ