spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'திரு. மாணிக்கம்' ஒரு அற்புதமான படைப்பு.... படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்!

‘திரு. மாணிக்கம்’ ஒரு அற்புதமான படைப்பு…. படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்!

-

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் திரு. மாணிக்கம் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.'திரு. மாணிக்கம்' ஒரு அற்புதமான படைப்பு.... படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்!

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி திரு. மாணிக்கம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனன்யா, தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருந்தனர். நந்தா பெரியசாமி இயக்கியிருந்த இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருந்தார். ஜிபி ஆர்கே சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. எம். சுகுமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். எமோஷனல் கலந்த திரில்லர் கதைக்களத்தில் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை அழுத்தமாக கூறியிருந்த திரைப்படம் தான் திரு. மாணிக்கம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் திரு. மாணிக்கம் திரைப்படத்தை வாழ்த்தி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு நல்ல படத்திற்கு அடையாளம் அந்தப் படத்தை பார்த்த பிறகு அதில் வரும் காட்சிகள் கதாபாத்திரங்கள் போன்றவை மூன்று அல்லது நான்கு நாட்களுக்காக நினைவில் வந்து கொண்டே இருக்கணும். அந்த படத்தில் வரும் ஏதாவது ஒரு நல்ல விஷயம் நம் வாழ்க்கையில் நாமும் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவாக வேண்டும்.'திரு. மாணிக்கம்' ஒரு அற்புதமான படைப்பு.... படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்! அந்த மாதிரி சமீபத்தில் நான் பார்த்த திரு. மாணிக்கம் என்ற படம் ஒரு அற்புதமான படைப்பு. உண்மை சம்பவத்தை வைத்து திரைக்கதை, வசனம் எழுதி சிறப்பாக இயக்கி இருக்கும் நந்தா பெரியசாமி அவர்கள் தான் ஒரு அற்புதமான இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார். திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. இந்த படம் இவ்வளவு சிறப்பாக உருவாக பணியாற்றியிருக்கும் மைனா சுகுமார், விஷால் சந்திரசேகர், குணா ரகு அவர்களுக்கும் இந்த படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கும் எனது அருமை நண்பர் சமுத்திரக்கனி, மதிப்பிற்குரிய பாரதிராஜா மற்றும் அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் இந்த படத்தை தயாரித்திருக்கும் ஜி.பி. ரவிக்குமார், என்னுடைய அருமை நண்பர் லிங்குசாமி மற்றும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ