spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்க முடியாது... நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி...

விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்க முடியாது… நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி…

-

- Advertisement -
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம் ஆண்டிற்கான தேசிய விருதான பத்மபூஷன் விருது நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து விருது பெற்ற விஜயகாந்த் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் டெல்லித் தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில், விஜயகாந்துக்கு ஒன்றிய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார். அதில், தனது அருமை நண்பர் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்ததில் நமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமன்றி 2024 பத்ம விருதுகள் புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டிருக்கின்றனர். அது மேலும், அவருக்கு பெருமை சேர்க்கிறது.

விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. திடீரென தோற்றி பல சாதனைகளை செய்து திடீரென மறைந்துவிட்டார். மதுரையில் பிறந்த மதுரை வீரன் கேப்டன் விஜயகாந்த் என்று நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

MUST READ