ரஜினி நடிப்பில் வெளியான கூலி படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி ‘கூலி’ திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், சத்யராஜ், உபேந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறது. இருப்பினும் உலகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் இப்படம் வசூல் ரீதியாக பட்டய கிளப்பி வருகிறது. ஏற்கனவே கோலிவுட்டில் இப்படம் ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கி விடும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் வெளியான நான்கு நாட்களில் கிட்டத்தட்ட ரூ.410 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதாவது தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ.100 கோடியை வசூலித்திருப்பதாகவும் ஆந்திர பிரதேசம், தெலுங்கானாவில் ரூ.50 கோடியை வசூலித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. எனவே இனிவரும் நாட்களில் இப்படம் விமர்சனங்களை தகர்த்து ரூ.1000 கோடியை நெருங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -