- Advertisement -
கோலிவுட் திரையுலகில் 80 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராஜ்கிரண். ராஜ்கிரணுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பெயர் ஜீனத் பிரியா. இவர், நாதஸ்வரம் தொலைக்காட்சி தொடரில் நடித்த முனீஸ் ராஜாவை காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். மகளின் ரகசிய திருமணத்தை எதிர்த்த நடிகர் ராஜ்கிரண், இனி ஜீனத் தனது சொந்த மகள் இல்லை என்றும், அவர்கள் இருவரும் தன் பெயரை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில், தன் கணவரை பிரிந்துவிட்டதாக ராஜ்கிரணின் மகள் பிரியா, திடீரென வீடியோ பகிர்ந்தார். இது பெரும் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனது திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல என்றும், முனீஸ் ராஜாவை தான் பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், தன் தந்தையின் சொல் கேட்காமல் அவரை மிகவும் வேதனைப் படுத்திவிட்டதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பாக பேசிய முனீஸ் ராஜா, ஜீனத்தின் பின்னணியில் இருப்பது யார் என உலகிற்கே தெரியும் என்று குற்றம் சாட்டியிருந்தார்.