தனியார் தீவுக்கு தேனிலவு சென்ற இந்தியன்2 நடிகை… புகைப்படங்கள் வைரல்…
- Advertisement -

ரகுல் ப்ரீத் சிங் அறிமுகமான திரைப்படம் இந்தியில் என்றாலும், அவர் தென்னிந்தியாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். தமிழில் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக என்னமோ ஏதோ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். எச்.வினோத் இயக்கிய தீரன் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றி ரகுல் ப்ரித் சிங்கிற்கு பட வாய்ப்புகள் அள்ளிக் கொடுத்தன. தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., கார்த்தியுடன் தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக ரகுல் நடிப்பில் தமிழில் அயலான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஜாக்கி பாக்னானி என்ற நடிகரை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவரின் திருமணமும் மார்ச் மாதத்தில் கோவாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து தற்போது தான், தனது கணவருடன் தேனிலவுக்கு ரகுல் சென்றிருக்கிறார். தீவுகள் நிறைந்த நாடான பிஜியில் உள்ள தனியார் தீவு ஒன்றில் அவர் தேனிலவு சென்றிருக்கிறார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்களை தினந்தோறும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இவை டிரெண்டாகி வருகின்றன.