Homeசெய்திகள்சினிமாதமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா.....மீண்டும் விஜயுடன் கூட்டணியா?

தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…..மீண்டும் விஜயுடன் கூட்டணியா?

-

பிரபல நடிகையான ரம்பா கடந்த 1992ல் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர். இவர் தனது 13 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கியவர். ஆரம்பத்தில் சில படங்களில் கேமியா தோற்றத்தில் நடித்து வந்தார்.தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா.....மீண்டும் விஜயுடன் கூட்டணியா? அதன் பின்னர் 1993இல் வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ரஜினி, விஜய், கமல், பார்த்திபன், அர்ஜுன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பல இளைஞர்களுக்கு கனவு கன்னியாகவும் திகழ்ந்தார். இவ்வாறு தமிழ், தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து பெயர் பெற்றார். மேலும் நடிகை ரம்பா திருமணத்திற்குப் பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றினார். இந்நிலையில் நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய், ரம்பாவையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார். இவர்களின் திடீர் சந்திப்பு ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதாவது நடிகை ரம்பா மீண்டும் விஜயுடன் இணைந்து நடிக்கப் போகிறாரா? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா.....மீண்டும் விஜயுடன் கூட்டணியா?தற்போது கிடைத்த தகவலின் படி நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாகவும் அப்படி நடித்தால் தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவும் பேசப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாராம். அதன்படி சிறிய கதாபாத்திரங்களிலும், கேமியோ தோற்றத்திலும் நடிக்க மாட்டேன் எனவும் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் எனவும் சொல்லி இருக்கிறாராம் ரம்பா. எனவே இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் ரம்பாவை மீண்டும் திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ