Homeசெய்திகள்சினிமாசாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு படத்தைத் தயாரிக்கும் ராம் சரண்!

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறு படத்தைத் தயாரிக்கும் ராம் சரண்!

-

பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்.

இவர் தனது நண்பர் விக்ரம் ரெட்டியுடன் இணைந்து வி மெகா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ராம் வம்சி கிருஷ்ணா இயக்கும் ‘தி இந்தியா ஹவுஸ் படத்தை ராம்சரண் முதன் முதலாக தயாரிக்கிறார். இந்தப் படத்தை தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற வெற்றி படங்களை தயாரித்த அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனமும், ராம்சரணின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தில் மூத்த நடிகர் அனுபம் கெர் மற்றும் நிகில் சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இது குறித்து வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம், ட்விட்டர் பக்கத்தில் “நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140 வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்……….
இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட அத்தியாயத்தை மீண்டும் கொண்டு வருகிறோம்” என்று போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

 

 

MUST READ