spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரத்தம் தெறிக்க தெறிக்க வெறித்தனம்… அனிமல் பட டீசர் வெளியானது!

ரத்தம் தெறிக்க தெறிக்க வெறித்தனம்… அனிமல் பட டீசர் வெளியானது!

-

- Advertisement -

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

தெலுங்கு சினிமாவின் கேம் சேஞ்சரான அர்ஜுன் ரெட்டி படமானது தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

we-r-hiring

அதைத்தொடர்ந்து சந்தீப் ரெட்டி வங்காவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் தற்போது இவர் 5 வருடங்கள் கழித்து பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூருடன் இணைந்துள்ளார்.

இவர்களின் கூட்டணியில் ‘அனிமல்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. டி சீரிஸ் மற்றும் பத்திரகாளி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது. இந்தப் படம் பிரம்மாண்டமான ஆக்சன் படமாக தயாராகி வருகிறது.

சமீபத்தில் அனிமல் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் தற்போது அதை தொடர்ந்து மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது.

இந்த டீசரில் வரும் சண்டைக் காட்சிகளில் ரன்பீர் கபூர் ரத்தம் தெறிக்க தெறிக்க கோடாரியுடன் சண்டையிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ