Homeசெய்திகள்சினிமாநடிகர்களையும் விட்டுவைக்காத டீப் பேக்... மர்ம கும்பல் மீது ரன்வீர் சிங் வழக்குப்பதிவு...

நடிகர்களையும் விட்டுவைக்காத டீப் பேக்… மர்ம கும்பல் மீது ரன்வீர் சிங் வழக்குப்பதிவு…

-

AI தொழில்நுட்பம் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானது என்று டெஸ்லா நிறுவனரும், டிவிட்டர் நிறுவனருமான எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் விதமாக ஒவ்வொரு நிகழ்வுகளும் ஒவ்வொரு நாளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இந்த AI தொழில்நுட்பம் மூலம் ஒருவர் முகத்திற்கு பதிலாக மற்றொருவர் முகத்தை வைத்து உருமாற்றம் செய்யலாம். இது டீப் ஃபேக் என்று அழைக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அண்மைக் காலத்தில் தவறான பாதையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமீப காலமாக திரைப்பட நடிகைகள் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். முதலில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவை குறித்து டீப் பேக் வீடியோ வெளியிட்டனர். அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியின் வீடியோவை ராஷ்மிகா போல ஆபாசமாக சித்தரித்து வீடியோ வௌியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஷ்மிகா மந்தனா மட்டுமன்றி கோலிவுட் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், உரிய நபரை கைது செய்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எதிரான பிரச்சார விளம்பரத்தில் ரன்வீர் சிங் ஈடுபட்டிருப்பது போன்ற டீப் பேக் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கம் அதிகமாகி இருப்பதாக ரன்வீர் சிங் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.

மேலும், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, இதற்கு எதிராக நடிகர் ரன்வீர் சிங் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதற்கு முன்பாகக அமீர் கானின் டீப் பேக் வீடியோ வௌியானது குறிப்பிடத்தக்கது.

MUST READ