தனுஷின் 51வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மெர்சல் பாடியது மிக முக்கியமான படமாக கருதப்படும் இப்ப படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இதைத் தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இயக்குனர் சேகர் கம்முலா இயக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி D51 படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் கான்செப்ட் போஸ்டரை பட குழுவினர் சமீபத்தில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டிருந்தனர். ஹய் பட்ஜெட்டில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. தற்போது அதனை உறுதி செய்யும் விதமாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.