தனுஷின் 51வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கிய இந்த படத்தின் டீசர் நாளை தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் சென்னையில் பிரமாண்டமான செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது தனுஷின் 50வது படம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் போஸ்டர் உடன் வெளியிட்டுள்ளனர். அதாவது சமீபத்தில் தனுஷ் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
அதன்படி தனுஷின் D51 படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கிறது. இந்நிறுவனங்களில் சார்பில் சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் கான்செப்ட் போஸ்டரை படக்குழுவினர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர்.
அதில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருப்பதாகவும் ஹை பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் சமீபத்தில் வெளியான தகவல்களின்படி படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தனிஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனினும் இது குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.