- Advertisement -
புகழ்பெற்ற பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள உலக அளவிலான பிரபலங்களின் பட்டியலில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பெயர் இடம்பிடித்துள்ளது.
கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை ராஷ்மிகா. பெங்களூரில் பிறந்து வளர்ந்து ஒட்டுமொத்த இந்திய திரை உலக்கையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா. தேயிலை எஸ்டேட் அதிபரின் மகள் தான் ராஷ்மிகா. பள்ளி பருவத்திலேயே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மாடல் துறையை தேர்வு செய்தார். முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ராஷ்மிகாவின் முகம் வெளியே தெரிந்தது.
