Homeசெய்திகள்சினிமா'ரத்னம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

‘ரத்னம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

விஷாலின் நடித்துள்ள ‘ரத்னம்‘ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'ரத்னம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆக்சன் கலந்த கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹரி, விஷால் கூட்டணியில் ரத்னம் திரைப்படம் உருவானது. இதில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்றது. 'ரத்னம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?அதன்படி வசூல் ரீதியாகவும் பின்தங்கியது. தற்போது வரை இந்த படம் 20 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரத்னம் திரைப்படம் வருகின்ற மே 24 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல தகவல்கள் கசிந்து வருகின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ