Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி நடிப்பில் 'ரத்தம்' ..... புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘ரத்தம்’ ….. புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

ரத்தம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்துள்ளனர்.
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. கண்ணன் நாராயணன் இசையிலும் அமர்நாத் ஒளிப்பதிவிலும் இப்படம் உருவாகியுள்ளது. இது ஒரு கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கிடையில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 இறைவன் உள்ளிட்ட பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் கடும் போட்டி நிலவுகின்றன. அதனால் ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதியை வருகின்ற அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அதன்படி ரத்தம் படம் வருகின்ற 6ம் தேதி வெளியாக இருப்பதாக தற்போது படக்குழுவினர் சார்பில் புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் சாத்தியம் இல்லாத எல்லாத்தையும் நீக்கிட்டா மிஞ்சுறது நம்ப முடியாத ஒன்னாருந்தாலும் அதான் உண்மை என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ