ரஜினி அண்ணன் அழைத்தால் சிவாஜி ப்ரொடக்ஷனில் திரைப்படம் பண்ண தயார்:நடிகர் பிரபு
சென்னை அம்பத்தூரில் தனியார் அப்பல்லோ பல் மருத்துவமனையின் முதலாவது கிளையினை நடிகர் பிரபு ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கேற்றியும் துவக்கி வைத்தார்.
இதன் பின்னர் அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.பின்னர் தன்னை காண காத்திருந்த ரசிகர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அப்போது அங்கிருந்த மருத்துவர் நீங்கள் அடுத்தமுறை அம்பத்தூர் கிளைக்குதான் வர வேண்டும் என கூற பல் வலியுடன் இவ்வளவு தூரம் வருவது கஷ்டம் என கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபுவிடம் ஜெயிலர் வெற்றி குறித்தும்,சிவாஜி ப்ரொடக்ஷனில் படம் தயாரிப்பு குறித்து கேட்டதற்கு.
அண்ணன் அழைத்தால் திரைப்படம் பண்ணுவோம்,சிவாஜி ப்ரொடக்ஷனில் நிச்சயம் என்றாவது ஒருநாள் நடிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார். ஜெயிலர் படத்தில் இந்த வயதிலும் அடித்து தூள் கிளப்பியுள்ளார் என புகழாரம் சூடியவர் அது மிகுந்த மகிழ்ச்சி என தெரிவித்தார்.
சந்திரமுகி 2 திரைப்படம் குறித்த கேள்விக்கு பதில் கூறுகையில்,
இயக்குனர் வாசுவிற்கு வாழ்த்து தெரிவிதவர்,சந்திரமுகி 2 தொடர்வது சந்தோஷம் என கூறினார்.வாசு என் இயக்குனர்,என்னை வைத்து அதிக திரைப்படம் இயக்கியவர், இந்த படத்தின் மூலமாக அவரது பட குழுவிற்கும் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்.