மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க தனக்கு விருப்பம் இல்லை என ஆர்.ஜே. பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் நானும் ரெளடி தான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து இவர் எல்கேஜி, வீட்ல விசேஷம், ரன் பேபி ரன், சொர்க்கவாசல் என பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதேசமயம் இவர் தற்போது சூர்யா 45 திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கிடையில் இவர் கடந்த 2020ல் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் உருவாகிறது. ஆனால் இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜிக்கு பதிலாக சுந்தர். சி இயக்குகிறார். வேல்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து பேசி உள்ளார்.
#RJBalaji about MookuthiAmman2
– I am not interested to do #MookuthiAmman2.
– Production have a idea to do the film, but i have NO idea to do, so they go for another one director#Suriya45pic.twitter.com/5MGAdzlZwM— Movie Tamil (@MovieTamil4) March 7, 2025
அதன்படி அவர் பேசியதாவது, “மூக்குத்தி அம்மன் 2 படம் இயக்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. தயாரிப்பு நிறுவனம் மூக்குத்தி அம்மன் 2 படம் எடுக்கின்ற ஐடியாவில் இருந்தார்கள். எனக்கு அந்த ஐடியா இல்லை. அதனால் அவர்கள் வேறு ஒரு இயக்குனரை வைத்து பண்ணுகிறார்கள். சுந்தர். சி தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அதனால் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.