spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇதுவரை நான் பண்ணாத படம்.... 'சொர்க்கவாசல்' குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி!

இதுவரை நான் பண்ணாத படம்…. ‘சொர்க்கவாசல்’ குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி!

-

- Advertisement -

சொர்க்கவாசல் படம் குறித்து ஆர்.ஜே. பாலாஜி பேசியுள்ளார்.இதுவரை நான் பண்ணாத படம்.... 'சொர்க்கவாசல்' குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி!

ஆர் ஜே. பாலாஜி தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். எல் கே ஜி வீட்ல விசேஷம் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்த ஆர்.ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து சூர்யா 45 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையில் இவர் சொர்க்கவாசல் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து கருணாஸ், நட்டி நட்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை சித்தார்த் விஸ்வநாத் இயக்க ஸ்வைப் ரைட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கிறிஸ்டோ சேவியர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிரின்ஸ் ஆண்டர்சன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இதுவரை நான் பண்ணாத படம்.... 'சொர்க்கவாசல்' குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி!இந்த படமானது வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய ஆர் ஜி பாலாஜி, “சொர்க்கவாசல் திரைப்படம் நான் இதுவரை பண்ணாத படம். இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த திட்டத்தை தொடங்கும் போதே நெட்பிளிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ