spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆர்.ஜே. பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' .... ட்ரெய்லர் எப்படி இருக்கு?

ஆர்.ஜே. பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ …. ட்ரெய்லர் எப்படி இருக்கு?

-

- Advertisement -

ஆர்.ஜே. பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்' .... ட்ரெய்லர் எப்படி இருக்கு?ஆர் ஜே பாலாஜி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் “சிங்கப்பூர் சலூன்”. கோகுல் இயக்கும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். விவேக் சிவா இசையமைத்துள்ளார்.காமெடி, எமோஷன்ஸ், காதல் நிறைந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடத் திட்டமிடப்பட்ட இப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ் இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடவுள்ளது. வரும் ஜனவரி 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் சிங்கப்பூர் சலூன் வெளியாக உள்ளது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலாக “வந்தா மல” வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சாதாரண முடி திருத்தும் கலைஞராக இருக்கும் ஆர்.ஜே பாலாஜி, தன்னுடைய துறையில் மிகப்பெரும் கலைஞனாக மாற வேண்டும் என முடிவெடுக்கிறார். அதனால் அவருக்கு காதல் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளும், அவரைச் சுற்றி நடக்கும் சமூகப் பிரச்சினைகளையும் பற்றி  சீரியசாக பேசி இருக்கும் படம் போலத் தெரிகிறது. வழக்கமான கோகுல் படங்களில் இருப்பது போல காமெடியை மட்டும் மையமாக வைத்துக் கொள்ளாமல் எமோஷன்ஸ் சற்று தூக்கலாகவே இப்படத்தில் இருக்கும் போல தெரிகிறது.இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா ஐயோ கேமியோ ரோலில் நடித்துள்ளனர்.

we-r-hiring

இப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவா ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர் என்பது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ