spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுன்பதிவில் மாஸ் காட்டும் சலார் திரைப்படம்... வெளியீட்டுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூல்...

முன்பதிவில் மாஸ் காட்டும் சலார் திரைப்படம்… வெளியீட்டுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூல்…

-

- Advertisement -
சலார் திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பே, முன்பதிவில் மட்டும் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது.

கேஜிஎஃப் எனும் பிரம்மாண்ட படைப்பின் மூலம் இந்தியா முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல். ஒரு குறுகிய வட்டத்தில் இருந்த கன்னட சினிமாவை உலகளவில் தூக்கிச் சென்றது கேஜிஎஃப் திரைப்படம். இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றன. இதில், இரண்டாம் பாகம் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் அடுத்த திரைப்படம் சலார்.

we-r-hiring
ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. முதலில் படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், வெளியீடு தள்ளிப்போனது. இப்படத்தின் முதல் தோற்றம், ட்ரைலர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது ரிலீஸ் ட்ரைலரும் வெளியாகி வைரலாகி வருகிறது.

நாளை மறுநாள் இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், சலார் திரைப்படத்தின் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சலார் திரைப்படத்தின் முன்பதிவில் மட்டுமே இதுவரை 30 கோடி ரூபாய் வரை வசூலித்ததுள்ளது. சலார் திரைப்படத்திற்காக ரசிகர்கள் பெரும எதிர்பார்ப்பில் உள்ளனர்.

MUST READ