கே ஜி எஃப் 1, 2 படங்களின் மூலம் பிரபலமான பிரசாந்த் நீல் இயக்கியுள்ள திரைப்படம் சலார் 1-CEASE FIRE. இந்த படத்தில் பிரபாஸ் மற்றும் பிரிதிவிராஜ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஈஸ்வரி ராவ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் இவர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
தேவா எனும் கதாபாத்திரத்தில் பிரபாஸும் வரதா எனும் கதாபாத்திரத்தில் பிரித்விராஜும் நடித்துள்ளனர். நண்பர்களாக இருக்கும் இவர்கள் எதற்காக பரம எதிரிகளாக மாறுகின்றனர் என்பதே இப்படத்தின் முழு நீள கதையாகும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபாஸ், சலார் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். கே ஜி எஃப் படத்தை போல் பல காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் மாஸான ஆக்ஷன் காட்சிகள் படத்தை பரபரப்பாக கொண்டு செல்கிறது. இப்படம் சலார் 2 சௌர்யாகன பர்வம் என்று இரண்டாம் பாகத்திற்கான லீடு கொடுத்து முடிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் நல்ல ஒரு ஆக்சன் படமாக இப்படம் வெளியானது. இந்நிலையில் முதல் நாளில் இப்படம் உலக அளவில் 165 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் வெறும் 5 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். ஏற்கனவே பிரபாஸ் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் போன்ற படங்களால் தமிழ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் காரணமாகவே சலார் படமும் தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெறவில்லை என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.