Homeசெய்திகள்சினிமாமீண்டும் ராம் சரணுக்கு ஜோடியாகும் சமந்தா!

மீண்டும் ராம் சரணுக்கு ஜோடியாகும் சமந்தா!

-

- Advertisement -

மீண்டும் ராம் சரணுக்கு ஜோடியாகும் சமந்தா!நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர். அந்த வகையில் விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேசமயம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளிலும் நடித்துள்ளார். சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான படம் குஷி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் நடிகை சமந்தா மயோசிடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சில நாட்கள் படம் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். அதன் பிறகு சிகிச்சைக்குப் பின்னர் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சமந்தா மீண்டும் படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அதன்படி சிட்டாடல் என்ற வெப்தொடரில் நடித்து வருகிறார் சமந்தா. இந்நிலையில் அடுத்ததாக ராம் சரணின் 16வது படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் ராம் சரணுக்கு ஜோடியாகும் சமந்தா!தற்காலிகமாக RC16 என்று  தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை புஜ்ஜி பாபு இயக்குகிறார். இந்த படத்தில் ஏற்கனவே நடிகை சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்ததாக கூறப்பட்டது.ஆனால் படத்திற்கு சாய் பல்லவி நோ சொன்னதாகவும், அவருக்கு பதிலாக நடிகை சமந்தா இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 2018 இல் வெளியான ரங்கஸ்தலம் எனும் திரைப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ