Homeசெய்திகள்சினிமாதிரையுலகை கிறங்கடிக்கும் ஆவேஷம்... படத்தை பாராட்டிய சாம்...

திரையுலகை கிறங்கடிக்கும் ஆவேஷம்… படத்தை பாராட்டிய சாம்…

-

அண்மையில் வௌியான ஆவேஷம் மலையாளப் படத்தை, நடிகை சமந்தா வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் ஃபகத் ஃபாசில், மலையாள மொழி மட்டுமன்றி, தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கலக்கி வருகிறார். மலையாளத்தில் பல படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் ஃபகத், தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து வேலைக்காரன், விக்ரம், இறுதியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். மாமன்னன் திரைப்படத்தில் அவர், ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தின் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து தெலுங்கிலும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக நடித்திருப்பார். தொடர்ந்து புஷ்பா இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இது தவிர, தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபகத் நடிப்பில் வெளியான மலையாளப் படம் ஆவேஷம். இந்த படத்தில் மன்சூர் அலிகான், ஆசிஸ் வித்யார்தி, சஜின் கோபு, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கடந்த 11-ம் தேதி வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு நடிகை சமந்தா வாழ்த்து தெரிவித்து பாராட்டி இருக்கிறார் மேலும். இப்படத்தின் இசை அமைப்பாளர் சுஷின் ஒரு மேதை என்றும் படத்தை கண்டு ரசித்த நடிகை சமந்தா பாராட்டி இருக்கிறார்.

MUST READ