- Advertisement -
இந்திய சினிமா எனும் சாம்ராஜ்யத்தில் கொடி கட்ட பறக்கும் நடிகை சமந்தா. அவர் அறிமுகமாகி நடித்தது தமிழாக இருந்தாலும், இன்று அவர்கோலிவுட் நடிகையாக மட்டுமன்றி இந்திய அளவில் ஹிட் நடிகையாக உருவெடுத்துள்ளார். தென்னிந்தியா மட்டுமன்றி வட இந்தியாவிலும் அவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழில் ஒரு முன்னணி நடிகையாக உயரத் தொடங்கினார்.
தமிழில் டாப் நடிகையாக உருவெடுத்த சமந்தா அதேசமயம், தெலுங்கிலும் பல படங்களில் நடித்தார். தமிழில் விஜய், சூர்யா, விஷால், அதர்வா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் தெலுங்கிலும் மகேஷ் பாபு, பவண் கல்யாண் என டாப் நடிகர்களுடனும் நடித்திருக்கிறார். இதையடுத்து பாலிவுட் பக்கம் அவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. பேமிலி மேன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதனிடையே அவர், காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யாவை விவாகரத்தும் செய்தார்.
Samantha Princess Diana Moment…
Wedding dress turns into Revenge dress😈 pic.twitter.com/aJwDHdP2fB
— S💕 (@siimtweetz) April 29, 2024