spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம்... முதல் தோற்றம் வெளியீடு...

சமுத்திரக்கனி நடிக்கும் ராமம் ராகவம்… முதல் தோற்றம் வெளியீடு…

-

- Advertisement -
சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகும் ராமம் ராகவன் படத்தின் முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. தொடக்கத்தில் இயக்குநராக வலம் வந்த சமுத்திரக்கனி, தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் ஹீராவாகவும் பல படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு மொழியில் பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன் உள்பட தெலுங்கின் உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் சமுத்திரக்கனி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் ரத்னவேல் படத்தில் நடித்து வருகிறார்.

we-r-hiring
இதுதவிர தமிழில் பல படங்களில் கமிட்டாகி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. அவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ராமம் ராகவம். பிருத்வி இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஸ்டேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் இத்திரைப்படத்தை வழங்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது. அப்பா – மகன் பாசத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

ஐதராபாத், சென்னை, தேனி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு பகிர்ந்துள்ளது.

MUST READ