spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசமுத்திரகனி நடிப்பில் உருவாகும் திரு. மாணிக்கம்......டப்பிங் பணிகள் நிறைவு!

சமுத்திரகனி நடிப்பில் உருவாகும் திரு. மாணிக்கம்……டப்பிங் பணிகள் நிறைவு!

-

- Advertisement -

சமுத்திரகனி, தென்னிந்திய சினிமாவில் இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை, அப்பா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் சமுத்திரக்கனி தற்போது ராமம் ராகவம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.சமுத்திரகனி நடிப்பில் உருவாகும் திரு. மாணிக்கம்......டப்பிங் பணிகள் நிறைவு! இதற்கிடையில் சமுத்திரகனி, திரு. மாணிக்கம் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து பாரதிராஜா, அனன்யா, நாசர், வடிவுக்கரசி, தம்பி ராமையா, இளவரசு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி பி ஆர் கே சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் விஷால் சந்திரசேகரின் இசையிலும் இப்படம் தயாராகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு எம் சுகுமார் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் மேகமலை, குமிளி, மூணார் உள்ளிட்ட பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். சமுத்திரகனி நடிப்பில் உருவாகும் திரு. மாணிக்கம்......டப்பிங் பணிகள் நிறைவு!இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் சம்பந்தமான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ