spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபடைத்தலைவன் திரைப்படம் வெளியீடு… ரசிகர்களின் கோலாகத்திற்கு தடை…

படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு… ரசிகர்களின் கோலாகத்திற்கு தடை…

-

- Advertisement -

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமாக இருந்து மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களோடு சண்முக பாண்டியன் பார்வையிட்டார்.படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு… ரசிகர்களின் கோலாகத்திற்கு தடை…விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் இயக்குநர் அன்பு இயக்கத்தில், இசையமைப்பாளர் இளையாராஜ இசையில் உருவாகியுள்ள படைத்தலைவன் திரைப்படம் பல்வேறு இடங்களில் இன்று வெளியானது. ஏற்கெனவே நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில் முதல் திரைப்படமாக சகாப்தம் வெளியானது.

இந்நிலையில், தற்போது இவரது நடிப்பில் இரண்டாவது திரைப்படமாக படைத்தலைவர் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு பின் அவரது மகன் நடிக்கும் திரைப்படத்தில் AI மூலம் நடிக்கும் காட்சி வெளியாவதால் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் இடையே  எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது.படைத்தலைவன் திரைப்படம் வெளியீடு… ரசிகர்களின் கோலாகத்திற்கு தடை…சென்னை கோயம்பேடு ரோகிணி திரையங்கில் வெளியான திரைப்படத்தை ரசிகர்களோடு பார்வையிட வந்த நடிகர் சண்முக பாண்டியனுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக திரையரங்கிற்கு முன்பு மேளதாளம் அடித்து வரவேற்க காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நடிகர் ராஜேந்திரன் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திரைப்படங்கள் வெளியாகும் துவக்க கட்சிகளின் போது கொண்டாட்டங்களில் ஈடுபட அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நயினார் நாகேந்திரன் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த முயற்சி – திருமாளவளவன் குற்றசாட்டு

we-r-hiring

MUST READ