Homeசெய்திகள்சினிமாசெல்வராகவனுடன் சந்தானம் நடித்த படம் என்னாச்சு… அவரே கொடுத்த அப்டேட்!

செல்வராகவனுடன் சந்தானம் நடித்த படம் என்னாச்சு… அவரே கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

செல்வராகவன் இயக்கத்தில் தான் நடித்த படம் குறித்து சந்தானம் அப்டேட் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கிய சந்தானம் அதையடுத்து கதாநாயகனாக அறிமுகம் ஆகி மக்கள் மனதை வென்றார்.

we-r-hiring

தற்போது முழு நேரமாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார. கதாநாயகன் ஆகிவிட்டாலும் அவரது ஆஸ்தான காமெடி ஜானரை விட்டு வெளியே வரவில்லை. தொடர்ந்து காமெடி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சந்தானம் நடிப்பில் DD Returns திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட  சந்தானம், தான் செல்வராகன்இயக்கத்தில் நடித்த மன்னவன் வந்தானடி படம் குறித்து பேசியுள்ளார். “அந்தப் படத்தின் படப்பிடிப்பு 80% நிறைவடைந்துவிட்டது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ளது.

செல்வராகவன் சார் ஒரு காட்சி கச்சிதமாக எடுக்கும் வரை விடவே மாட்டார். 20 30 டேக்குகள் போனாலும் சரி. அவர் நினைத்ததை எடுக்கும் வரை விட மாட்டார். காதல் கதைக்களம் கொண்ட ஒரு சீரியஸா திரைப்படம் இது. இந்த படம் வெளியாகுமா இல்லையா என்பது தயாரிப்பாளர் கையில் தான் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ