spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநானி நடிக்கும் சூர்யாவின் சனிக்கிழமை... முதல் பாடல் ரிலீஸ் தேதி இதோ...

நானி நடிக்கும் சூர்யாவின் சனிக்கிழமை… முதல் பாடல் ரிலீஸ் தேதி இதோ…

-

- Advertisement -
kadalkanni
நானி நடித்து வரும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வௌியாகி இருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் நானி. இவர் அடுத்தடுத்து புதுப்புது கதை அம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ,இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து, நடிகர் நானி 31-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு சூர்யாவின் சனிக்கிழமை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சரிபோதா சனிவாரம் என்ற பெயரில் வெளியாகிறது. அடேட சுந்தரா படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயே இப்படத்தை இயக்குகிறார். டிடிவி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இத்திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜாய் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார்.

https://x.com/i/status/1800129477693042957

ஆக்சன் கலந்த கதைகளத்தில் இப்படம் உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் ஜூன் 15-ம் தேதி முதல் பாடல் வௌியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ