சினிமா

சத்யராஜ், வசந்த் ரவி நடிக்கும் ‘வெப்பன்’…..புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published by
Yoga
Share

சத்யராஜ், வசந்த ரவி நடிக்கும் வெப்பன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சத்யராஜ், வசந்த் ரவி நடிக்கும் 'வெப்பன்'.....புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சத்யராஜ் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பெயர் பெற்றவர். பின்னர் ஹீரோவாக பல படங்களில் நடித்த வந்த சத்யராஜ் தற்போது குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுடனும் இளம் நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறார். அந்த வகையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்ற வசந்த் ரவியுடன் இணைந்து வெப்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார் சத்யராஜ். இந்த படத்தில் சத்யராஜ் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்த படமானது ஆக்சன் திரில்லர் ஜானரில் தயாராகியுள்ளது. மேலும் இந்த படத்தில் சத்யராஜ், வசந்த் ரவியுடன் இணைந்து தான்யா ஹோப், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க குகன் சென்னியப்பன் இதனை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் இந்த படமானது 2024 மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி இந்த படமானது ஜூன் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
Published by
Yoga
Tags: Cinema New release date sathyaraj vasanth ravi Weapon சத்யராஜ் சினிமா புதிய ரிலீஸ் தேதி வசந்த் ரவி வெப்பன்