Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் அடுத்த படம்...... சூர்யா பட இயக்குனருடன் கூட்டணி!

ஜெயம் ரவியின் அடுத்த படம்…… சூர்யா பட இயக்குனருடன் கூட்டணி!

-

நடிகர் ஜெயம் ரவி தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே ஜெயம் ரவி நடிப்பில் சைரன் திரைப்படம் வெளியானது.ஜெயம் ரவியின் அடுத்த படம்...... சூர்யா பட இயக்குனருடன் கூட்டணி! அதைத்தொடர்ந்து பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற பல படங்களில் நடிக்கிறார். இதற்கிடையில் ஜெயம் ரவி, கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகி விட்டார். இந்நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயம் ரவி அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் பாண்டிராஜ், சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாக சொல்லப்பட்டது. இருப்பினும் இந்த படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அடுத்ததாக ஜெயம் ரவியை இயக்க முடிவு செய்துள்ளார். எனவே ஜெயம் ரவி, பாண்டிராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 2024 ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஜெயம் ரவியின் அடுத்த படம்...... சூர்யா பட இயக்குனருடன் கூட்டணி!அதே சமயம் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த படமானது கிராமத்து பின்னணியில் உருவாகும் கமர்சியல் படமாக இருக்கும் என்று நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே இனி வரும் நாட்களில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ