spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'குபேரா'..... டீசர் குறித்த அறிவிப்பு!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘குபேரா’….. டீசர் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் படத்தை முடித்துவிட்டு தற்போது 51வது படத்தில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'குபேரா'..... டீசர் குறித்த அறிவிப்பு!இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு திருப்பதி, மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்தப் படமானது மும்பை தாராவியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி வருகிறது. ஏற்கனவே
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் அனல் பறக்கும் டீசர் வருகின்ற மே 2ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிரடியாக வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ