Homeசெய்திகள்சினிமாஇறுதி கட்டப் பணிகளில் பாலாவின் 'வணங்கான்'.... லேட்டஸ்ட் அப்டேட்!

இறுதி கட்டப் பணிகளில் பாலாவின் ‘வணங்கான்’…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

பிரபல இயக்குனர் பாலா, தனித்துவமான படங்களை இயக்குவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இறுதி கட்டப் பணிகளில் பாலாவின் 'வணங்கான்'.... லேட்டஸ்ட் அப்டேட்!இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக நிலவி வந்தது. அதன்படி இந்த படத்தில் அருண் விஜய் புதிய பரிமாணத்தில் நடித்திருக்கிறார். அதே சமயம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் டீசரும் ஏற்கனவே வெளியாகி எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக தூண்டியுள்ளது. அடுத்ததாக படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டப் பணிகளில் பாலாவின் 'வணங்கான்'.... லேட்டஸ்ட் அப்டேட்! இந்நிலையில் இந்த படமானது இறுதி கட்டப் பணிகளில் இருப்பதாக பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆகவே படமானது விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர் அருண் விஜய், வணங்கான் படத்தை தொடர்ந்து ரெட்ட தல எனும் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ