Homeசெய்திகள்சினிமாவிரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2...... கதாநாயகி யார் தெரியுமா?

விரைவில் 7 ஜி ரெயின்போ காலனி 2…… கதாநாயகி யார் தெரியுமா?

-

7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு 7 ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியானது.

இந்த படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தனர். ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையேயான ஆழமான காதல் குறித்து பேசும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் செல்வராகவன்.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறாத காரணத்தால் 7 ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தின் மூலம் தான் இழந்த வெற்றியை பெறுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

7 ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் ரவி கிருஷ்ணா தான் கதாநாயகனாக நடிக்கப் போகிறார் என்றும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இதன் கூடுதல் தகவலாக, 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தின் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்க இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ