Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத ஷாருக்கானின் டன்கி... ப்ரீ புக்கிங் விவரம் இதோ...

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காத ஷாருக்கானின் டன்கி… ப்ரீ புக்கிங் விவரம் இதோ…

-

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய திரைப்படம் டன்கி. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி நாளை வௌியாக உள்ளது. இந்த ஆண்டில் வெளியாகும் ஷாருக்கான் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். 3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். விக்கி கவுஷல், போமன் இரானி, விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ப்ரிதம் இசையமைத்துள்ள இந்த படத்தை, ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

’பதான்’, ‘ஜவான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு வெளியாகும் மூன்றாவது திரைப்படம் இதுவாகும். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. அதற்கு முன்பாக சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த திரைப்படம் பதான். தீபிகா படுகோன், ஆப்ரஹாம் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் ஆயிரத்து நூறு கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.

அந்த வகையில் அடுத்ததாக நாளை டன்கி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் 10 கோடி ரூபாய் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்லது. இந்த படத்திற்கு ப்ரீ புக்கிங் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறததால், ரசிகர்களிடையே குழப்பம் நீடிக்கிறது.

MUST READ