spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா3 நாட்களில் ரூ.80 கோடி... வசூலில் அசத்தும் சைத்தான்...

3 நாட்களில் ரூ.80 கோடி… வசூலில் அசத்தும் சைத்தான்…

-

- Advertisement -
தமிழில் வாலி படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை ஜோதிகா. முதல் படமே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து விஜய்யுடன் குஷி படத்தில் இணைந்து நடித்தார். குஷி படம் மாபெரும் ஹிட் படமாக மாறியதால் முன்னணி நடிகையாக உருவெடுத்தார் ஜோதிகா. அடுத்தடுத்து ஜோதிகாவுக்கு ஏறுமுகம் தான். இதைத் தொடர்ந்து சூர்யாவுடன் மட்டும் கிட்டத்தட்ட 5 திரைப்படங்களில் ஜோதிகா நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட நடிகை ஜோதிகா, தற்போது தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

தற்போது ஜோதிகா மீண்டும் பாலிவுட்டிலும் ரி என்ட்ரி கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து தற்போது பாலிவுட்டில் நடித்து உள்ளார். ஜோதிகா, மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஒரு சூப்பர்நேச்சுரல் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருக்கிறது. விகாஸ் பாஹ்ல் இத்திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

சைத்தான் திரைப்படம், கடந்த 8-ம் தேதி இந்தி மொழியில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சைத்தான் படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இத்திரைப்படம் சுமார் 3 நாட்களில் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி உள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

MUST READ