Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் சித்தார்த்தின் 'சித்தா' பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!

கவனம் ஈர்க்கும் சித்தார்த்தின் ‘சித்தா’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள்!

-

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகர் சித்தார்த் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் சேதுபதி படத்தின் இயக்குனர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சித்தா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை எட்டாகி என்டர்டயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்பாக வெளியாகி கவனம் ஈர்த்தது. மேலும் சமீபத்தில் இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி திறக்க வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ‘கண்கள் ஏதோ’ எனும் முதல் பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை யுகபாரதி எழுதியுள்ளார். பிரதீப் குமார் மற்றும் கார்த்திகா வைத்தியநாதன் பாடலை பாடியுள்ளனர். மேலும் இந்த பாடலை ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது கவனம் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ