Homeசெய்திகள்சினிமாசிங்கப்பூர் சலூன் ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு

சிங்கப்பூர் சலூன் ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோவில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் ஹீரோவுக்கு நண்பர் வேடத்திலும், நகைச்சுவை நடிகராகவும் நடித்து வந்தார். அதே சமயம் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றினார். அவரது கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

இதையடுத்து எல்ஜிகே படத்தின் மூலம் அவர் நடிகராக அறிமுகமாகினார். இப்படத்தை ஆர்ஜே பாலாஜி மற்றும் சரவணன் சேர்ந்து இயக்கினர். இதைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்தார். இதில் நயன்தாராவும் அம்மன் வேடத்தில் நடித்திருப்பார். இதையடுத்து, வீட்ல விஷேசன், ரன் பேபி ரன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். தற்போது ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சிங்கப்பூர் சலூன். இதில் சத்யராஜ், மீனாட்சி சௌத்ரி, கிஷன் தாஸ் , ஜான் விஜய், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தின் முன்னோட்டம் வரும் 18-ம் தேதி வெளியாகிறது. மேலும், சத்யம் திரையரங்கில் முன்னோட்டத்தை வௌியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வௌியாகிறது.

MUST READ