Homeசெய்திகள்சினிமாதள்ளிப்போகும் ஜெயம்ரவியின் சைரன் படத்தின் வெளியீடு

தள்ளிப்போகும் ஜெயம்ரவியின் சைரன் படத்தின் வெளியீடு

-

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் சைரன் படத்தின் வௌியீடு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயம்ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் இறைவன். அஹமத் இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து, சைரன் என்ற படத்தில் அவர் நடித்துள்ளார். ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் சைரன் படத்தில் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் இப்படத்தை தயாரி்தது உள்ளார். படத்தின் முழு படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அண்மையில் படத்தின் முன்னோட்டம் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் டீசர் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது வெளியிடப்பட்டது.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு, எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். சைரன் திரைப்படம் டிசம்பரில் வௌியாகும் என தெரிவித்திருந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னணி வேலைகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக வெளியீடு தள்ளிப்போவதாக தெரிகிறது.

MUST READ