spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசுரோ... சுரோ... வெளியானது அயலான் பட புது பாடல்

சுரோ… சுரோ… வெளியானது அயலான் பட புது பாடல்

-

- Advertisement -
அயலான் படத்திலிருந்து சுரோ சுரோ எனத் தொடங்கும் புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலிக்கும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் சிவா, அடுத்தடுத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டான் மற்றும் மாவீரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. முக்கியமாக குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படங்களில் நடிப்பது சிவகார்த்திகேயனின் வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியீட்டு தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் அயலான்.

we-r-hiring
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயலான். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.சிவகார்த்திகேயன் நடித்து வெளியான திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இதுவாகும்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னை சொகுசு விடுதியில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து துபாயில் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்நிலையில், அயலான் படத்திலிருந்து சுரோ சுரோ என்ற மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. வரும் 12-ம் தேதி அயலான் படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ