spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலாவின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ இணையத்தில் வைரல்!

சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலாவின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா டான்ஸ் ரிகர்சல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலாவின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது ‘பராசக்தி’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதனை சுதா கொங்கரா இயக்க டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இது ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.சிவகார்த்திகேயன் - ஸ்ரீலீலாவின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ இணையத்தில் வைரல்! இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதேசமயம் படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடி அலையே எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாடலை ஷான் ரோல்டன், தீ ஆகிய இருவரும் இணைந்து பாடி இருந்த நிலையில் இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா ஆகிய இருவரும் நடனமாடியிருந்தனர்.

we-r-hiring

இந்நிலையில் சிவகார்த்திகேயன்- ஸ்ரீலீலா ஆகிய இருவரும் இந்த பாடலுக்கு ரிகர்சல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் ரவி அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ