spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்......இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்……இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்......இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!தொடக்கத்தில் சின்னத்திரையில் வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் படிப்படியாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக முன்னேறி இருப்பவர் சிவகார்த்திகேயன். காமெடி, ரொமான்ஸ், ஃபேமிலி சென்டிமென்ட், ஆக்சன் என எல்லா வகை படங்களிலும் நடித்து வருகிறார்.
அடுத்ததாக சயின்ஸ் ஃபிக்சன் வகையில் ஏலியன் கதையம்சத்தில் உருவாகியுள்ள படமான “அயலான்” படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 2024 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் வேலைகள் மும்முறமாக நடந்து வருகின்றன. இதற்கான இன்டர்வியூ ஒன்றில் சிவகார்த்திகேயன் எதிர்காலத்தில் திரைப்படங்களை இயக்கப் போவதாகவும் கூறியுள்ளார். அவர் அந்த இன்டர்வியூவில் ” எனக்கு படங்களை இயக்கும் திட்டம் இருக்கிறது. அதேநேரம் இப்போது நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தி சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். என்னுடைய 21 வது படமும் (SK21) அத்தகைய சவாலான படம் தான். இப்படத்திற்காக என்னுடைய 200% உழைப்பைக் கொடுத்த வருகிறேன்.இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்......இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்! மேலும் எனக்கு பீல் குட், ஆக்சன் என இரண்டு மாறுபட்ட பாணியிலும் படங்களை இயக்கும் திட்டம் உள்ளது” என்று கூறியுள்ளார். இதிலிருந்து நிச்சயம் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் எதிர்காலத்தில் படங்கள் வெளியாகும் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். இச்செய்தி அவருடைய ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக தலைவர் 171 படத்திலும் AR முருகதாஸ் இயக்க உள்ள புதிய படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ