Homeசெய்திகள்சினிமா'கோட்' படத்தை காணவந்த சிவகார்த்திகேயன்.... வைரலாகும் வீடியோ!

‘கோட்’ படத்தை காணவந்த சிவகார்த்திகேயன்…. வைரலாகும் வீடியோ!

-

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக இவர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா, வெங்கட் பிரபு ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் திரையரங்கிற்கு கோட் படத்தை காண வந்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. 'கோட்' படத்தை காணவந்த சிவகார்த்திகேயன்.... வைரலாகும் வீடியோ!அமெரிக்கா மற்றும் தமிழ்நாடு தவிர மற்ற பகுதிகளில் சிறப்பு காட்சிகளுடன் படமானது மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. இந்த படத்தைக் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ