spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'கோஸ்ட்'..... டிரைலர் வெளியீடு!

சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோஸ்ட்’….. டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

சிவராஜ்குமாரின் கோஸ்ட் பட டிரைலர் வெளியாகி உள்ளது.

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் கோஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஶ்ரீனவாஸ் இயக்கியுள்ளார். இதில் சிவராஜ்குமார் உடன் இணைந்து ஜெயராம், அனுபவம் கேர், பிரசாந்த் நாராயணன் அர்ச்சனா ஜோயிஸ் சத்திய பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தேஷ் ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. ட்ரைலரில் ஆக்சன் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இதில் டி ஏஜிங் தொழில் நுட்பத்தின் மூலம் இளம் வயது சிவராஜ்குமார் காண்பிக்கப்படுகிறார். இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

we-r-hiring

சிவராஜ்குமார் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். ஜெயிலர் படத்தில் இவரின் பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கோஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

MUST READ