Homeசெய்திகள்சினிமா'கேம் சேஞ்சர்' படத்தில் எஸ் ஜே சூர்யா மட்டும் வில்லன் இல்ல..... இன்னும் 2 பேர்...

‘கேம் சேஞ்சர்’ படத்தில் எஸ் ஜே சூர்யா மட்டும் வில்லன் இல்ல….. இன்னும் 2 பேர் இருக்காங்க!

-

ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்து வரும் படம் கேம் சேஞ்சர்.'கேம் சேஞ்சர்' படத்தில் எஸ் ஜே சூர்யா மட்டும் வில்லன் இல்ல..... இன்னும் 2 பேர் இருக்காங்க! இந்த படத்தில் ராம்சரண் உடன் இணைந்து கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இப்படம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தமன் இசையிலும் தயாராகி வருகிறது. ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பாக படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு தற்போது வரை படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. 'கேம் சேஞ்சர்' படத்தில் எஸ் ஜே சூர்யா மட்டும் வில்லன் இல்ல..... இன்னும் 2 பேர் இருக்காங்க!அதே சமயம் இந்த படம் அரசியல் பின்னணியில் உருவாகி வருவதாகவும் இந்த படத்தில் ராம்சரண் கலெக்டராக நடிப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. மேலும் இந்த படத்தை பட குழுவினர் 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் ரசிகர்கள் பலரும் கேம் சேஞ்சர் படத்தில் அப்டேட் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி மார்ச் 27ஆம் தேதி ராம்சரணனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 'கேம் சேஞ்சர்' படத்தில் எஸ் ஜே சூர்யா மட்டும் வில்லன் இல்ல..... இன்னும் 2 பேர் இருக்காங்க!இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் மூன்று வில்லன்கள் நடிக்கின்றனர் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஏற்கனவே எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் நவீன் சந்திரா மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ