- Advertisement -
விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி திரைப்படத்தின் படப்பிடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். தமிழில் சிம்பு நடித்த போடா போடி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த விக்னேஷ் சிவன், முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் கோலிவுட் திரையில் இன்று வரை பேசப்படும் முக்கிய படமாகும். காதல், காமெடி, பாடல்கள் என நானும் ரவுடி தான் திரைப்படம் ஒரு பெரிய ஹிட் அடித்தது.


இப்படத்தின் மூலம் காதலிக்க தொடங்கிய விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் முடித்துக் கொண்டனர். இதையடுத்து, காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கினார். இதில், நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். இதையடுத்து இடைவெளிக்கு பிறகு மீண்டும் விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு எல்.ஐ.சி. என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிகராகவும், தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் நடிக்கின்றனர். எஸ்ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் படத்திற்கு இசை அமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.



