spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநீங்களும் மாற்றம் அமைப்பில் இணைந்தால் அவர் மகிழ்ச்சியடைவார்...... எஸ்.ஜே. சூர்யா பேச்சு!

நீங்களும் மாற்றம் அமைப்பில் இணைந்தால் அவர் மகிழ்ச்சியடைவார்…… எஸ்.ஜே. சூர்யா பேச்சு!

-

- Advertisement -

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இவர் தற்போது பென்ஸ், ஹண்டர் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். நீங்களும் மாற்றம் அமைப்பில் இணைந்தால் அவர் மகிழ்ச்சியடைவார்...... எஸ்.ஜே. சூர்யா பேச்சு!அடுத்ததாக காஞ்சனா 4 திரைப்படத்தையும் இயக்க உள்ளார். இவ்வாறு பன்முக திறமைகளை கொண்டிருக்கும் இவர் ஏராளமான ஏழை எளிய குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்கி கொடுத்தும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்தும் வருகிறார் லாரன்ஸ். இது ஒரு பக்கம் இருக்க கே பி ஒய் பாலா, எஸ் ஜே சூர்யா ஆகியோருடன் இணைந்து மாற்றம் என்ற அமைப்பை தொடங்கி அதன் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கி வருகிறார். அதன்படி நேற்று (ஜூன் 18) தேனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு மாற்றம் அமைப்பின் மூலம் டிராக்டர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ் ஜே சூர்யா கலந்து கொண்ட நிலையில் ராகவா லாரன்ஸ் செய்யும் மக்கள் சேவையை பார்த்து பூரித்துப் போனார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார் எஸ் ஜே சூர்யா.

அப்போது பேசிய அவர், “ராகவா லாரன்ஸ் தொடங்கியுள்ள மாற்றம் அமைப்பின் வங்கிக் கணக்கு சொர்க்கத்தில் தான் இருக்கிறது. பூமியில் இல்லை. எனவே மாற்றம் அமைப்பின் கஜானாவை யாராவது திருட நினைத்தால் அவர்கள் உயிரை விட்டுட்டு சொர்க்கத்திற்கு சென்றால்தான் அது முடியும். நாங்கள் செய்யும் மக்கள் சேவையை பார்த்து மற்றவர்களும் உதவி செய்தால் எங்கள் ஆசை நிறைவேறிடும். ஒரு பாடல் பிரபலமானால் அதை வைத்து ரீல்ஸ் போடுவது போல் கஷ்டப்படுபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்து அதை ராகவா லாரன்ஸின் சமூக வலைதள பக்கத்தில் பகிருங்கள். நீங்களும் மாற்றம் அமைப்பில் இணைந்தால் ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி அடைவார்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ