Homeசெய்திகள்சினிமாபல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் சினேகா!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் சினேகா!

-

- Advertisement -

‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி அமைக்கிறார். இந்தப் படத்திற்கான முதற்கட்ட தயாரிப்பு பணிகள் மும்பரமாக நடந்து வருகின்றன.
படத்தில் விஜயின் தோற்றத்தை நவீன முறையில் வேறுபடுத்தி காட்டுவதற்காக படக்குழுவினர் அமெரிக்கா சென்று உள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்தப் படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறாராம். அந்த 3 கதாபாத்திரங்களுக்கும் தனித்தனியாக ஜோடிகள் இருக்கிறதாம். அதன்படி ஒரு கதாபாத்திரத்தில் ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது .மற்றொரு கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கிறாராம்.
ஆனால் தற்போது ஜோதிகா இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்று விலகி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ‘மெர்சல்’ படத்திலும் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிப்பதாக இருந்தது. அப்போதும் ஜோதிகா படத்திலிருந்து விலகினார்.அதையடுத்து தளபதி 68-ல் விஜய்க்கு ஜோடியாக சிம்ரனை நடிக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவரும் விலகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை சினேகாவை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
விஜய் மற்றும் சினேகா இருவரும் இணைந்து வசீகரா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ