Homeசெய்திகள்சினிமாநல்ல படத்திற்கு இங்கு இடமில்லை - பாடலாசிரியர் பிரியன்

நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை – பாடலாசிரியர் பிரியன்

-

இன்றைய காலக்கட்டத்தில் நல்ல திரைப்படங்களுக்கு இங்கு இடமில்லை என்றும், பெரிய திரைப்படங்கள் வந்தால் சிறிய படங்களை தூக்கிவிடுவதாகவும் பாடல் ஆசிரியர் பிரியன் தெரிவித்து உள்ளார்.

தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில் பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ள திரைநல்ல படத்திற்கு இங்கு இடமில்லை – பாடலாசிரியர் பிரியன்ப்படம் அரணம். மாறுபட்ட ஹாரர் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் பேசிய பாடலாசிரியர் பிரியன், அரணம் ஒரு பெரும் தவம். இப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம். 20 ஆண்டுகள் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால், புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன என்ன செய்வார்ள்? என தெரிவித்திருந்தார்.
மேலும், ஒரு கலையை அந்த துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில் மட்டும் தான் நடக்கிறது. படம் எடுப்பது இப்போது மிகக்கடினமாகி விட்டது. படம் படைப்பாளிகள் கையில் இல்லை, காப்பரேட் கையில் இருக்கிறது. நல்ல திரைப்படங்களுக்கு தற்போது இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடும் சிறிய திரைப்படங்களை எடுத்து விடுகின்றனர். ஆயிரம் தியேட்டரிலும் ஒரே படம் தான் ஓடுகிறது என்று தெரிவித்தார்.

பாடல் ஆசிரியர் பிரியன் இயக்கி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கதாநாயகியாக வர்ஷா நடித்து இருக்கிறார். லகுபரன், கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கின்றனர். நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிகே படத்தொகுப்பு செய்துள்ளார். சாஜன் மாதவ் இசை அமைத்திருக்கிறார்.

MUST READ